புதுதில்லி

கடனை அடைக்க கொலை செய்தவர் கைது

DIN

வாங்கிய கடனை அடைக்க ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி போலீஸார் கூறியதாவது:
வடகிழக்கு தில்லியில் உள்ள பாபர்பூரில் உள்ள நகைக்கடையை நடத்தி வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஓம் பிரகாஷ் வர்மா, கடந்த 8ஆம் தேதி மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
சம்பவத்தின்போது அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்லிடப்பேசி, ரிக்ஷா ஓட்டுநரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அவரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அந்த செல்லிடப்பேசியை மோஹித் குப்தா என்பவர் வழங்கியதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மோஹித் குப்தாவை கைது செய்தோம். மோஹித் குப்தாவிடம் நடத்திய விசாரணையில், மற்றொருவருக்கு வாங்கிக் கொடுத்த கடனை திரும்ப செலுத்துவதற்காக, நகைக்கடையில் எப்போதும் தனியாக இருக்கும் ஓம் பிரகாஷ் வர்மாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மோஹித் குப்தா ஒப்புக் கொண்டார். அதன் படி கடந்த 8ஆம் தேதி இரவு ஓம் பிரகாஷ் வர்மாவின் கடைக்குள் திடீரென புகுந்து, சட்டரை பூட்டி கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ரூ. 10 ஆயிரத்துக்கு தனது நண்பர் மூலம் விற்று, ரூ. 9,800 -கான தனது கடனை அடைத்துள்ளார்.
உயிரிழந்த ஓம் பிரகாஷ் வர்மாவின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை மோஹித் குப்தாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT