புதுதில்லி

தொல்லியல் பூங்காவில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

DIN

தெற்கு தில்லியில் உள்ள மெஹரெளலி தொல்லியல் பூங்காவில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு தில்லியில் உள்ள மெஹரெளலி தொல்லியல் பூங்காவில் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தொல்லியல் பூங்கா வளாகத்தில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களான ஜமாலி கமாலி டோம்ப், குவாலி-கான் டோம்ப், ராஜோன் கி பாவ்லி ஆகியவற்றின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
தொல்லியல் பூங்காவைத் தொடர்ந்து பராமரித்து, மேம்படுத்தத் தேவையான திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த துணைநிலை ஆளுநர், இது தொடர்பாக அமைப்பை ஒன்றை ஏற்படுத்த தில்லி வளர்ச்சி ஆணைய (டிடிஏ) அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
தொல்லியல் பூங்கா முழுவதையும் பாதுகாக்கவும், பூங்காவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், பராமரிப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்யவும் இதுபோன்ற அமைப்பை அக்டோபர் இறுதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தொல்லியல் பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்கு வருவோருக்கும், பார்வையாளர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று டிடிஏ அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
முன்னதாக தொல்லியல் பூங்காவில் இருந்த பார்வையாளர்களிடம் துணைநிலை ஆளுநர் கலந்துரையாடினார். அப்போது ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு டிடிஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, தில்லி வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவர், தில்லி வளர்ச்சி ஆணையத்தின் முதன்மை ஆணையர் (தோட்டக்கலை), முதன்மைப் பொறியாளர் (தென் மண்டலம்), தெற்கு தில்லி சார் கோட்டாட்சியர், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT