புதுதில்லி

6 மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் இன்று வேலை நிறுத்தம்

DIN

தில்லியில் உள்ள 6 மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குரைஞரும், தில்லி வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலர் ஜெய்வீர் சிங் சௌஹான் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லி நீதிமன்றங்களில் உள்ள சில நீதிபதிகள் வழக்குரைஞர்களை தங்கள் உதவியாளர்களைப்போல் வழிநடத்துகின்றனர். சில நீதிபதிகளின் தவறான வழிமுறையால் ஊழல் நடைபெறுகிறது. அவர்களின் பெயர்களை தில்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீஸ் ஹசாரி நீதிமன்றத்தின் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி பாட்டியாலா ஹவுஸ், ரோஹிணி, சாகேத், துவாரகா, கர்கர்டூமா, தீஸ் ஹசாரி ஆகிய 6 மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞர்களும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதனால் தில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள் ஒரு நாள் பாதிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT