புதுதில்லி

2 டாக்ஸி ஓட்டுநர்களிடம் கொள்ளை: கார்கள் கடத்தல்

DIN

நொய்டாவில் இரு வேறு இடங்களில் டாக்ஸி ஓட்டுநர்கள் இருவரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு காரை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாதவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
டாக்ஸி ஓட்டுநரான எம்.டி. அக்ரம், காவல்துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். தில்லியில் உள்ள ராஜ் காட்க்கு செல்ல வேண்டும் என்று வாடிக்கையாளர் போல ஒருவர் டாக்ஸியை பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, அவரை ஏற்றிக் கொண்டு அக்ரம் சென்று கொண்டிருந்தார். மஹாமயா மேம்பாலத்தில் செல்லும் போது, அந்த நபர் அக்ரமத்திடம் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு காரை கடத்திச் சென்றதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
இதேபோல மற்றொரு சம்பவத்தில் ஆயுதம் ஏந்திய மூவர் டாக்ஸி ஓட்டுநர் மனோஜ் குமாரை மிரட்டி கொள்ளையடித்ததுடன், காரையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக மனோஜ் குமார், நொய்டா பேஸ்-3 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அடையாளம் தெரியாத அந்த மூவரும் செக்டார் 65-இல் டாக்ஸில் ஏறினர். காஜியாபாத் ராஜ் நகருக்குச் செல்லும் வழியில் அவர்கள் மனோஜ் குமாரை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT