முகப்பு
புதுதில்லி

இறைச்சிக் கூடங்களில் அதிரடி சோதனை  

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
இச்சோதனை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ஷாரதா, பிரம்மபுரி ஆகிய இடங்களில் உள்ள இறைச்சிக் கூடங்களில் முறையான அனுமதி இல்லாமல் விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. 
இதன் அடிப்படையில் கிழக்கு தில்லி கால்நடை சேவை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் காவல் துறையின் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 
இச்சோதனையின் போது அனுமதி பெறாமல் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த 26 காளை மாடுகள் மீட்கப்பட்டன. ரொக்கம் ரூ.12,000 கைப்பற்றப்பட்டது. இறைச்சிக் கூட உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்

முழு கட்டுரையைப் படிக்க →