புதுதில்லி

விபத்தில் சிக்கியவர்களை மீட்க தில்லி காவல் துறைக்கு விரைவில் பிரத்யேக வாகனங்கள்!

DIN

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் வகையில் தகுந்த உபகரணங்களுடன் கூடிய சாலை பேரிடர் மேலாண்மை வாகனங்களை தில்லி போக்குவரத்துக் காவல் துறையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:
தில்லியில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் மிகவும் கொடூரமான விபத்துகளும் ஏற்படுகின்றன. அப்போது, விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. விபத்துக்குள்ளான கார், கன ரக வாகனங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதில் ஏற்படும் சிரமம் காரணமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பும் வகையில், அனைத்து உபகரணங்களையும் உள்ளடக்கிய இரண்டு வாகனங்களை தில்லி போக்குவரத்துக் காவல் துறைக்கு வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் பேரிடர் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும். இவற்றில் மீட்பு நடவடிக்கைக்குத் தேவையான அனைத்து வகையான உபகரணங்கள், கருவிகள் இருக்கும். சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியின் போது, வாகனங்களின் கனமான உலோகங்களை வெட்டி எடுப்பதற்கான கருவிகள் இந்த வாகனத்தில் பிரத்யேகமாக இடம் பெறும். மேலும், சாலைகளில் வேறுடன் சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கான கருவிகளும் இந்த வாகனத்தில் வைக்கப்பட்டிருக்கும். தற்போது வடிவமைக்கப்பட்டு வரும் இந்த வாகனம் விரைவில் தில்லி போக்குவரத்துக் காவல்துறையில் சேர்க்கப்படும் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT