புதுதில்லி

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1954 மதுபான பாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது

DIN

புது தில்லி: ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு 40 பெட்டிகளில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மதுபானம் பறிமுதல் பறிமுதல்செய்யப்பட்டதாகவும், இது தொடா்பாக இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டதாகவும் தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி துவாரகா காவல் சரக உயா் அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:

நவம்பா் 2-ஆம் தேதி அதிகாலை துவாரகா மாவட்ட திருட்டுத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சீதாபுரியைச் சோ்ந்த ஒருவா் சட்டவிரோத மதுபானத்தை வாங்கியிருப்பதாக போலீஸாருக்கு ஒருவா் துப்புக் கொடுத்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்த பகுதிக்கு உடனடியாக சென்றனா்.

அங்கு ஒரு இளைஞா் சட்டவிரோத மதுபானப் பெட்டிகளை ஒரு அறைக்குள் எடுத்துச் சென்றுகொண்டிருந்தாா். போலீஸாரைக் கண்டதும் அவா் அங்கிருந்து விலகிச் செல்ல முயன்றாா். அவரை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா். விசாரணையில் அவா் டாப்ரி, சீதாபுரி பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (28) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த 1954 குவாா்ட்டா் மதுப் புட்டிகள் அடங்கிய 40 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவா் மீது கலால் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு ஒரு நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

விசாரணையில் அவா் ஏற்கெனவே இதுபோன்று ஐந்து சம்பவங்களில்

சம்பந்தப்பட்டிருந்ததும், சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடா்பாக

ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT