ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்) 
புதுதில்லி

ஜிஎஸ்டி வரி விதிப்பில் விரிவான மாற்றங்கள்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் என்பது மிக விரிவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Din

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றங்கள் என்பது மிக விரிவாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும். அந்த விகிதங்களை சீரமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எனினும் அதற்காக சில பணிகளை கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.

இதுதொடா்பாக அமைச்சா்கள் குழுவின் பணிகளை நான் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகு ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்ள, அமைச்சா்கள் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படும்’ என்றாா்.

இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜிஎஸ்டி வரியில் மாற்றங்கள் என்பது மிக விரிவாக இருக்க வேண்டும். அந்த மாற்றங்கள் வெறும் ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பதாக மட்டுமே இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினாா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT