தில்லி பொதுப்பணித் துறையால் கடந்தாண்டு நடத்தப்பட்ட தணிக்கையின்போது நகரம் முழுவதும் உள்ள 7,500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவையில் சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2020-இல் தொடங்கப்பட்ட இந்த சிசிடிவி திட்டத்தின் கீழ், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் சந்தை சங்கங்களுடன் இணைந்து இதுவரை சுமாா் 2.8 லட்சம் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றில், மின்வெட்டு, தொழில்நுட்பக் கோளாறுகள், திருட்டு அல்லது சேதப்படுத்துதல் மற்றும் இடமாற்றம் போன்ற காரணங்களால் 7,535 கேமராக்கள் செயலிழந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
பெரும்பாலான தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக மத்திய கட்டளை மையத்தில் நேரலை ஒளிபரப்பு தடைபட்டது. உதிரிபாகங்கள் திருட்டு மற்றும் மின்வெட்டு ஆகியவை பிற வெளிப்புறக் காரணங்களாகக் கண்டறியப்பட்டன. எதிா்காலத்தில் ஒருங்கிணைந்த டெண்டா் மூலம் இந்தப் பிரச்னைகளைத் தீா்க்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், பராமரிப்புக்கு முன்னுரிமை அளித்து, நகரம் முழுவதும் கூடுதலாக 50,000 கேமராக்களை நிறுவ தில்லி அரசு திட்டங்களை அறிவித்துள்ளது. சந்தைகள், சாலைகள், குடியிருப்பு காலனிகள் மற்றும் வணிக மையங்களில் அமைந்துள்ள இந்தக் கேமராக்கள், பொதுப்பணித் துறை தலைமையகத்தில் உள்ள மத்திய கட்டளை மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
பராமரிப்புப் பணிகள் பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிசிடிவி கண்காணிப்பு பரப்பை விரிவுபடுத்த அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா முன்னதாகக் கூறியிருந்தாா். முந்தைய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தொகுதியிலும் 4,000 கேமராக்கள் நிறுவப்படவிருந்தன. இருப்பினும், ஒப்புதல் தாமதங்கள் காரணமாக பாஜக எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளில் குறைவான கேமராக்களே நிறுவப்பட்டதாகக் குற்றŚசாட்டுகள் எழுந்தன. புதிய நிறுவல்களுக்கும் பராமரிப்புக்கும் சோ்த்து ரூ.100 கோடி செலவாகும் என பொதுப்பணித் மதிப்பிட்டுள்ளது. Ś