முகப்பு
புதுதில்லி

இடபிள்யுஎஸ் சேர்க்கை: பள்ளிகள் திரும்பப் பெறும் தொகை உயர்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய (இடபிள்யுஎஸ்) பிரிவின் கீழ் படிக்கும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகள் திரும்பப் பெறும் தொகையை தில்லி அரசு உயர்த்தியுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 5:39 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பொருளாதாரத்தில் பின்தங்கிய (இடபிள்யுஎஸ்) பிரிவின் கீழ் படிக்கும் மாணவர்களுக்காக தனியார் பள்ளிகள் திரும்பப் பெறும் தொகையை தில்லி அரசு உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து தில்லி கல்வித் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தில்லி அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த திரும்பப் பெறும் தொகை தொடர்பாக தனியார் பள்ளிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. இந்நிலையில், இது தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் திரும்பப் பெறும் தொகை ஒரு மாணவருக்கு ரூ. 600 வீதம்  உயர்த்தப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கையின் போது ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 1,598 வழங்கப்படும். இதுபோல, நர்சரி முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு  தலா ரூ. 2,242 ஆகவும், 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ. 2,225 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
மேலும், சீரூடைக்காக திரும்பப்பெறும் தொகை,  5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தலா ரூ. 1,100,  8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தலா ரூ.1,400 என்ற வீதத்தில்  ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும். அரசிடமிருந்து பெறப்படும் திரும்பப் பெறும் தொகை தொடர்பாக தனியொரு வங்கிக் கணக்கை தனியார் பள்ளிகள் வைத்திருக்க வேண்டும். இத்தொகை கிடைத்த தனியார் பள்ளிகள்  2 மாதங்களுக்குள் சீருடை, பாட புத்தகங்கள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்ட சான்றை மாவட்டக் கல்வி  அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.