நிர்பயா தீர்ப்பு : ஸ்வாதி மாலிவால் வரவேற்பு
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், 3 பேரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், 3 பேரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பை தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றிக் கடன்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே நிர்பயாவுக்கு நீதி கிடைக்கும் என்றார் அவர்.