புதுதில்லி

வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சியில் 67 புதிய வாகன நிறுத்த மையங்கள்

DIN

வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் 20,000 வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையில் புதிதாக 67 வாகன நிறுத்த மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இவற்றில் மொத்தம் சுமார் 20,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
 இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: புதிய வாகன நிறுத்த மையங்களைக் கட்டுவதற்கான இடங்களைத் தேர்வு செய்துள்ளோம். இந்த இடங்களில் சுமார் 42 பல அடுக்கு வாகன நிறுத்தும் வளாகங்கள் கட்டப்படவுள்ளன. இவை மத்திய, மேற்கு, தெற்கு மண்டலங்களில் அமைக்கப்படவுள்ளன. மேற்கு மண்டலத்தில் 2,410 வாகனங்களை நிறுத்தக் கூடிய வகையில் 16 வாகன நிறுத்த வளாகங்கள், தெற்கு மண்டலத்தில் 1,504 வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையில் 13 மையங்களும், மத்திய மண்டலத்தில் 3,975 வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையில் 13 வாகன நிறுத்த வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் மொத்தம் சுமார் 8,000 வாகனங்களை நிறுத்த முடியும். இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இன்னும் எட்டு மாதங்களில் கட்டுமானப் பணியை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் தொடர்பாக ஆய்வு செய்த பிறகு புதிய வாகன நிறுத்த மையங்களை மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்களில் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். 
இதற்கிடையே, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய வாகன நிறுத்த மையங்களை அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் சுமார் 12,000 வாகனங்களை நிறுத்தும் வகையில் புதிதாக 25 வாகன நிறுத்த மையங்கள் உருவாக்கப்படும் .இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படவுள்ளன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT