முகப்பு
புதுதில்லி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க ஃபிக்கி வலியுறுத்தல்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) வலியுறுத்தியுள்ளது.

Updated On : 21 மே, 2018 at 11:46 PM
பகிர்:

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் ராஜேஷ் ஷா திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுவரும் இந்நேரத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் வகையில் அவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.