தெரு நாடகங்கள் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு: என்டிஎம்சி திட்டம்
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பகுதிகளில் தெரு நாடகங்கள் நடத்தப்படவுள்ளதாக அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பகுதிகளில் தெரு நாடகங்கள் நடத்தப்படவுள்ளதாக அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என்டிஎம்சி அதிகாரிகள் கூறியதாவது:
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பே உலகளவில் டெங்கு அதிகரிக்கக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தால் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். என்டிஎம்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் பல செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில், மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளைக் விளக்கிக் கூறும் வகையில் விழிப்புணர்வுத் தட்டிகள் மாநகராட்சிப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக்கின் தீமைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் என்டிஎம்சி பகுதிகளில் தெரு நாடகங்கள் நடத்தவுள்ளோம். தில்லியில் உள்ள பிரபலமான நாடகக் குழுக்கள் இந்த தெரு நாடகங்களை நடத்தவுள்ளன. தில்லியில் உள்ள கல்லூரி நாடகக் குழுக்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.