புதுதில்லி

தபஸ் அமைப்பு சார்பில் பரத நாட்டிய போட்டிகள்

DIN


தபஸ் அமைப்பின் சார்பில் நான்காவது ஆண்டு பரத நாட்டியப் போட்டிகள் தில்லியில் அண்மையில் நடைபெற்றது.
லோக் கலா மஞ்சில் ஜூனியர் மற்றும் குழு பிரிவில் தில்லியைச் சேர்ந்த ராதிகா கதல், சுபைல் பான் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். ஜூனியர் பிரிவில் ஹிருத்திகா சோனி முதலிடமும், கிவி கச்வா இரண்டாமிடமும், வைதாஹி சர்மா மூன்றாமிடமும் பெற்றனர். மெரிட் தகுதியை இப்ஸா நௌட்டியாக் பெற்றார். நிரியா கல்ப் பரதநாட்டியம் குழுவினர் குழு பிரிவில் பரிசு பெற்றனர். சீனியர் சோலோ பிரிவில் தில்லியைச் சேர்ந்த ராகினி சந்திரசேகர் மற்றும் ராஷ்மி ரௌத் ஜெய்ஸ்வால் நடுவர்களாகச் செயல்பட்டனர். சீனியர் சோலோ பிரிவில் பூஜா தயல், ஸ்ருதி பாய், தன்யா சுரேஷ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை தபஸ் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜானவரி ராஜாராமன் பிர்பாலியா, அவருடைய இளம் சகோதரிகள் தேவிகா ராஜாராமன், தாரிணி ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT