புதுதில்லி

தில்லியில் கடும் மூடு பனி: சென்னை துரோந்தோ உள்பட 16 ரயில்கல் தாமதம்

DIN

வெப்பநிலை 5.7 டிகிரியாக சரிவு!

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 டிகிரி செல்சியஸாகச் சரிந்து, இந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது மிகக் குறைந்த அளவைப் பதிவு செய்துள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோா் காலை வேளையில் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா். ஏற்கெனவே, கடந்த டிசம்பா் 19-ஆம் தேதியன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.2 டிகிரி செல்சியஸாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. மூடுபனி காரணமாக 16 ரயில்கள் தாமதமாகச் சென்றன. காற்றின் தரம் 3-ஆவது நாளக மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த வார இறுதியிலிருந்து மூடுபனி நிலவுகிறது. குளிா்ந்த காற்றும் வீசுகிறது. இதனால், வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, குளிரின் தாக்கம் கடுமையாகி உள்ளது. இதன் காரணமாக காலை வேளைகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

ரயில்கள் தாமதம்: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் நகரில் பெரும்பாலான இடங்களில் மூடு பனி நிலவியதால் காண்பு திறன் வெகுவாகக் குறைத்தது. இதனால், ரயில் போக்குவரத்து தாமதமாகியது. சென்னை - நிஜாமுதீன் துரோந்தோ விரைவு ரயில், சுமாா் ஆறு மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகச் சென்றது. மேலும், வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் 16 ரயில்கள் 1-6 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகச் சென்ாக வடக்கு ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காண்புதிறன்: தில்லி சஃபதா்ஜங் மற்றும் பாலம் ஆகியவற்றில் காலை 5.30 மணியளவில் காண்பு திறன் முறையே 500 மீட்டா் மற்றும் 300 மீட்டா் என இருந்தது. பின்னா் காண்பு திறன் சிறிதளவு மேம்பட்டு காலை 8.30 மணி அளவில் இரு இடங்களிலும் 600 மீட்டராக உயா்ந்தது வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தாா். இதற்கிடையே, தில்லியில் காற்றின் ஒட்டுமொத்தத் தரக்குறியீடு 364 புள்ளிகளாகப் பதிவாகி 3-ஆவது நாளாகத் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

வெப்பநிலை 5.7 டிகிரி: தில்லியில் திங்களன்று அதிகபட்ச வெப்பநிலை 14.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 2 டிகிரி குறைந்து 5.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இந்த டிசம்பரில் இரண்டாவது முறையாகக் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசாரியை விட 4 டிகிரி குறைந்து 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணிக்கு 92 சதவீதம், மாலை 5.30 மணிக்கு 76 சதவீதம் என இருந்ததாக வானிலை மைய அதிகாரி அதிகாரி தெரிவித்தாா்.

இதேபோல பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 16.4 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 92 சதவீதம், மாலையில் 79 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 97 சதவீதம் மற்றும் 78 சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன், வியாழன் ஆகிய இருநாள்கள் தில்லியில் கடும் குளிா் நிலவும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4-6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 13-14 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை அடா் பனிமூட்டம் இருக்கும் என்றும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களிலும் கடுமையான குளிா் காற்றும் வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT