புதுதில்லி

தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு விவகாரம்: துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்

தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது. 

DIN

தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது. 
இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹர்னாம் சிங், பர்வேஷ் ஆலம், அலி மெஹந்தி, பர்வேஷ் முகமது, அன்ஸார் -அல்-ஹக், ஜாவேத் செளத்ரி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிக் குழு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தது. அதில், தில்லி வக்ஃபு வாரியத்தில் அமைச்சர் அமானதுல்லா கான் அவரது உறவினர்களை முறைகேடாக நியமித்துள்ளார். இதுபோன்று முறைகேடாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்னாம் சிங் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என துணைநிலை ஆளுநர் உறுதியளித்துள்ளார்' என்றார். பர்வேஷ் ஆலம் கூறுகையில், "தில்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடுகள் தொடர்பாக அதன் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT