புதுதில்லி

போலீஸ் போல நடித்து ரூ.1.5 லட்சம் வழிப்பறி: மூவர் கைது

DIN

தில்லியில் போலீஸ் போல நடித்து, துப்பாக்கிமுனையில் ரூ.1.5 லட்சம் வழிப்பறி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது:
திமர்பூர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை, போலீஸ் சீருடை அணிந்த ஒருவர் உள்பட 3 பேர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்களை போலீஸ் என்று கூறிய அவர்கள், அந்த நபரின் பையை சோதனையிடுவது போல நடித்துள்ளனர். பின்னர், அந்த நபரை தாக்கியும், துப்பாக்கியை காட்டி மிரட்டியும், பையை பறித்துக் கொண்டு மூன்று பேரும் தப்பிவிட்டனர். அதில் ரூ.1.5 லட்சம் பணம் இருந்துள்ளது.
இதனிடையே, ஸ்வரூப் நகர் ப குதியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மேற்கண்ட மூவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். பின்னர், மூவரையும் சுற்றிவளைத்து பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்தளது பெயர் சோம்பீர் (24), கௌரவ் (18), பவான் (23) என்பதும், போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT