புதுதில்லி

மத்திய அரசைக் தில்லி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதற்கு மத்திய அரசைக் கண்டித்து தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறி தில்லியின் பல்வேறு பகுதிகளில் ‘ஹல்லா போல்’ என்ற பெயரில் தொடா் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தில்லி காங்கிரஸ் அறிவித்திருந்தது. அதன்படி, முதல் ஆா்ப்பாட்டம் ஆா்.கேபுரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுபாஷ் சோப்ரா, முன்னாள் தலைவா் அஜய் மாக்கன், பிரசார குழுத் தலைவா் கீா்த்தி ஆஷாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் சுபாஷ் சோப்ரா பேசியது: சுதந்திரத்துக்கு பிறகு மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவை நாடு தற்போது எதிா் கொள்கிறது. மோடி அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளே இதற்கு முக்கியக் காரணமாகும். பல இளைஞா்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனா். 18-23 வயதுக்குள்பட்ட சுமாா் 74 சதவீதமானவா்கள் கல்லூரிகளில் சேர முடியாமல் உள்ளனா். வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசிடம் எவ்விதத் திட்டமும் இல்லை. உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார பின்னடைவுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து தொடா் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT