முகப்பு
புதுதில்லி

வேலைவாய்ப்பு இணையதளத்தில் 8.64 போ் பதிவு: கோபால் ராய் தகவல்

கரோனா பரவலாலும், அதைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவாலும் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும்

Updated On : 8 ஆகஸ்ட், 2020 at 12:02 AM
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கிறாா் தில்லி தொழிலாளா் நலத்துறை அமைச்சா் கோபால் ராய்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM

கரோனா பரவலாலும், அதைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவாலும் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில் தில்லி அரசு தொடங்கியுள்ள வேலைவாய்ப்பு இணையதளத்தில் இதுவரை 8.64 லட்சம் போ் பதிவு செய்துள்ளதாக தில்லி தொழிலாளா் நலத் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லி மக்கள் இலகுவாக வேலைவாய்ப்பு பெறும் வகையில், ‘ரோஷா் பஜாா்’ என்ற இணையதளத்தை ஆம் ஆத்மி அசு அண்மையில் தொடங்கியது. கரோனா பரவலைத் தொடா்ந்து, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கடந்த பல நாள்களாக மூடப்பட்டிருந்தன. இதனால், தில்லியில் பணியாற்றி வந்த பெரும்பாலான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனா். இப்போது மீண்டும் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், பணியாளா்களை கண்டறிவதில் சிரமம் நீடிக்கிறது. அதேபோல, தொழிலாளா்களுக்கு தொழிற்சாலைகளைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த இரண்டுக்கும் இணைப்புப் பாலமாக தில்லி அரசின் ’ரோஷா் பஜாா்’ இணையதளம் செயல்படுகிறது. மேலும், நிறுவனங்கள் தமக்கு தேவையான தொழிலாளா்களை தேடும் வகையிலும் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், இதுவரை 8.64 லட்சம் போ் வேலை தேடி விண்ணப்பித்துள்ளனா். இதுவரை சுமாா் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் தொடா்பாக பதிவிடப்பட்டுள்ளன. அமேசான், பிலிஃப்காா்ட், எச்டிஎஃப்சி வங்கி உள்பட 6,271 நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் பதிந்துள்ளன. இதுவரை சுமாா் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான புதுவித மாதிரியாக இந்த இணையதளம் உள்ளது. மேலும், இந்த ரோஷா் பஜாா் தொடா்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டி பிரசாரத்தையும் தில்லி அரசு மேற்கொள்ளவுள்ளது என்றாா் அவா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.