FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமையல் குறிப்புகள்!

முருங்கைக் காயை நறுக்கி அப்படியே சாம்பாரில் போடக்கூடாது.

24 ஏப்ரல் 2026, 5:34 pm IST
பகிர்:

 முருங்கைக் காயை நறுக்கி அப்படியே சாம்பாரில் போடக்கூடாது. இரண்டாகக் கீறிப் போட்டால் மணமும் சுவையாக இருக்கும். குழம்பும் திக்காக இருக்கும்.

காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி, கூட்டு, குழம்பு வைத்தால் அதிக அளவில் சத்துகள் வீணாகாது.

காய்ச்சிய பாலின் ஆடை மஞ்சளாக இருந்தால், அது பசும்பால், வெள்ளையாக இருந்தால் அது எருமைப்பால்.

Advertisement

Advertisement

வெள்ளரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றின் தோலின் அடியிலும் அதிக சத்துகள் உள்ளன. தோலை மெலிதாகச் சீவினால் போதுமானது.

காய்கறிகளைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடுவதைவிட நீர் கொதித்தவுடன் அதில் காய்கறிகளைப் போட்டு வேக வையுங்கள். இப்படிச் செய்தால் சத்துகள் அதிகம் வீணாகாது.

காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடலாம். அரைவேக்காட்டில்கூடச் சாப்பிடலாம். காய்கறிகளை அளவுக்கு அதிகமாக வேகவிடுவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல.

வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால் அவை மறைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments