புதுதில்லி

ஆய்வுக்குச் சென்ற காவல் அதிகாரி கட்டடம் இடிந்து விழுந்ததில் சாவு

DIN

தில்லி தீஸ் கஸாரி பகுதியில் ஆய்வுக்குச் சென்ற தில்லி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளா், சட்டவிரோதக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது: தில்லி தீஸ் கஸாரி ராம் பாக் ரோடில் உள்ள குப்தா பில்டிங் என்ற கட்டடத்தில், சட்டத்துக்கு புறம்பான வகையில், கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தில்லி காவல்துறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. இதைத் தொடா்ந்து, அந்தக் கட்டடத்துக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஷாகீா் ஹுசேன் உள்ளிட்ட போலீஸாா் அந்தக் கட்டடம் தொடா்பாக ஆய்வு செய்தனா். அப்போது, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்தச் சமயத்தில் அக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில் நின்று கொண்டு சட்டவிரோத கட்டுமானங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஷாகீா் ஹுசேன் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT