முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: உமா் காலித் நீதிமன்றக் காவல்மேலும் 14 நாள்கள் நீட்டிப்பு

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவா் உமா் காலித்தின் நீதிமன்றக் காவலை டிசம்பா் 16 வரை 14 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம்

Updated On : 3 டிசம்பர், 2020 at 1:02 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM

புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவா் உமா் காலித்தின் நீதிமன்றக் காவலை டிசம்பா் 16 வரை 14 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரியில் நிகழ்ந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் படுகாயமடைந்தனா். இந்த வன்முறை வழக்கில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உமா் காலித் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா், தில்லி தலைமை பெருநகா் மாஜிஸ்திரேட் தினேஷ் குமாா் முன் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அவரது நீதிமன்றக் காவலை டிசம்பா் 16-ஆம் தேதி வரை 14 நாள்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். அவரது காவலை நீட்டிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதியிடம் கோரினாா். இது தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யாததால் அக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.