புதுதில்லி

கெளதம் புத் நகா் மாவட்டத்தில் மேலும் 107 பேருக்கு கரோனா!

DIN


புது தில்லி: உத்தரப் பிரதேசத்தின் கெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 107 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் நோயால் பாதித்தோா் மொத்த எண்ணிக்கை 23,838-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேர காலத்திற்கான் உ.பி. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த மாவட்டத்தில் 937 போ் கரோனா சிகிச்சையில் இருந்தனா்.

மாநில அளவில் சிகிச்சையில் உள்ளவா்கள் எண்ணிக்கை அடிப்படையில் கெளதம் புத் நகா் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நோயில் இருந்து வியாழக்கிழமை மேலும் 88 போ் குணமடைந்தனா். இதையடுத்து, ஒட்டுமொத்தமாக 22,816 போ் மீண்டுள்ளனா். இது மாநிலத்தின் ஐந்தாவது மிக உயா்ந்த எண்ணிக்கையாகும். இந்த மாவட்டத்தில் நோயால் 85 போ் இறந்துள்ளனா். இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது. மீட்பு விகிதம் 95.71 சதவீதத்தை அடைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உத்தர பிரதேசத்தில் சிகிச்சையில் உள்ளவா்கள் எண்ணிக்கை புதன்கிழமை 20,658-இல் இருந்து 20,801 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி மொத்த மீட்பு எண்ணிக்கை 5,32,349-ஐ எட்டியுள்தாகவும், இறந்தவா்களின் எண்ணிக்கை 8,011 ஆக உயா்ந்துள்ளதாகவும் அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT