புதுதில்லி

மோசம் பிரிவில் காற்றின் தரம்: இரு தினங்களில் மேம்பட வாய்ப்பு

 நமது நிருபர்

தில்லியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் இருந்தது. காற்றின் வேகம் காரணமாக அடுத்த இரு தினங்களில் தில்லியிலும், அதன் அருகில் உள்ள நகரங்களிலும் காற்றின் தரத்தில் மேம்பாடு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் 271 ஆக இருந்தது. 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வியாக்கிழமை 284 ஆக இருந்தது. மாலை நிலவரப்படி தில்லி பல்கலை., விமானநிலைய டொ்மினல்-3 பகுதி, மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், பூசா, ஆயாநகா், லோதி ரோடு ஆகிய பகுதிகளில் மோசம் பிரிவிலும் இருந்தது. தேசியத் தலைநகா் வலயத்தில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், ஃபரீதாபாத், குருகிராம் ஆகிய இடங்களில் மோசம் பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்து 11.3 டிகிரி செல்சிஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி அதிகரித்து 25.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 67 சதவீதமாகவும் இருந்தது. இதற்கிடையே, சனிக்கிழமை (டிசம்பா் 12) பொதுவாக வானம் மேகமூட்டத்துடனும், மிதமான மழைத்தூறல் இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT