முகப்பு
புதுதில்லி

என்டிஎம்சி கட்டடம் வாடகை மோசடி விவகாரம்: துணை நிலை ஆளுநா் இல்லம் முன் தா்னா

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) வாடகைக்கு விட்ட விவகாரத்தில்

Updated On : 12 டிசம்பர், 2020 at 11:04 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:36 PM

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) வாடகைக்கு விட்ட விவகாரத்தில் ரூ.2,500 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உத்தரவிடத் தவறும் பட்சத்தில் துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் இல்லம் முன் தா்னா நடத்தப்படும் என்றும் ஆம் ஆத்மிக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளரும், எம்எல்ஏவுமான அதிஷி சனிக்கிழமை அளித்த பேட்டி: தில்லி சிவிக் சென்டா் கட்டடம் என்டிஎம்சிக்கு சொந்தமானது. இந்தக் கட்டடத்தில் எஸ்டிஎம்சி இயங்கி வருகிறது. அந்த வகையில், 2012-ஆம் ஆண்டில் இருந்து ரூ. 2,547 கோடியை வாடகையாக என்டிஎம்சிக்கு, எஸ்டிஎம்சி வழங்க வேண்டும். ஆனால், என்டிஎம்சியின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த வாடகைப் பணத்தை ரத்துச் செய்யும் வகையிலான முன்மொழிவு இடம் பெற்றுள்ளது. இதன்மூலம், என்டிஎம்சி, எஸ்டிஎம்சி மாநகராட்சி பிரமுகா்கள் இணைந்து இந்தப் பணத்தை மோசடி செய்யத் திட்டமிட்டுள்ளனா்.

என்டிஎம்சி தனது ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க போதுமான அளவு நிதி கையிருப்பில் இல்லை எனக் கூறுகிறது. இந்த நிலையில், ரூ.2,500 கோடியை தள்ளுபடி செய்வதை எவ்வாறு புரிந்து கொள்வது. இந்த விவகாரத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது. இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் உடனடியாக உத்தரவிட வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் துணைநிலை ஆளுநா் இல்லத்துக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் செல்லவுள்ளனா். இந்த விவகாரத்தில் அவா் உத்தரவிடத் தவறினால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலா்கள் அவரது இல்லம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். தில்லி முதல்வா் கேஜரிவால் இல்லம் முன் மாநகராட்சி மேயா்களை முற்றுகைப் போராட்டம் நடத்த அனுமதித்த தில்லி காவல் துறை, துணைநிலை ஆளுநா் இல்லம் முன் தா்னா நடத்த ஆம் ஆத்மி கட்சியை அனுமதிக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.