FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு தொடர்வது எப்படி என்பது பற்றி

பொறியியல் படிப்புகள் - IANS
பகிர்:

கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிப்புகளுக்கு தொடர்ந்து பல ஆண்டு காலமாகவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.

பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்து எந்தக் கல்லூரியில் சேர்வது என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

பெரும்பாலான மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிக்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு செய்யறிவு, டேட்டா சயின்ஸ் என பல பிரிவுகளில் பிரிந்து சேர்க்கை அமைந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு குறிப்பாக கோர் பாடப்பிரிவுகளுக்குத்தான் மக்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது.

Advertisement

Advertisement

முதலில் எல்லாம் தேர்வு முடிவுகள் வெளியானால்தான் கல்லூரி சேர்க்கை பற்றி பேசுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, கல்லூரிகளில் சேர்க்கையே முடிந்து வருகிறது. அதிலும் சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்களுக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்திட்டங்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்ததால், இவர்கள் கட்-ஆஃப் வைத்து கல்லூரியில் சேர முடியாது என்று தெரிந்துவிட்டது.

எனவே, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கல்லூரிகளுக்கு முன்கூட்டியே படையெடுக்கும் பெற்றோர் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எப்போதும் புதிய பொறியியல் படிப்புகளுக்கு அதிகம் ஆர்வம் ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு கோர் படிப்புகள் என்ற அடிப்படை பொறியியல் படிப்புகளுக்கு மவுசு அதிகரித்திருக்கிறதாம். அதில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங், சிவில், எஞ்ஜினியரிங்கும் அடங்கும்.

கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் இன்னமும் நிறைவடையாத நிலையில், கல்லூரி மாணவர்களை விட, பள்ளி மாணவர்களின் பெற்றோர்தான் அதிகம் கல்லூரிக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

summary

How to increase instrest for two courses in engineering education

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments