முகப்பு
தமிழ்நாடு

காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!

காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதால் தொஓண்டர்கள் ஏமாற்றம்...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:52 PM
விஜய் - TVK
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:43 PM

காரைக்குடிக்கு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசாமல் சென்றதால் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்காலுக்கு சென்றார்.

Advertisement

ஆனால், வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருக்கும் நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி 4 மணிநேரத்துக்கு மேலாக விஜய் சாலைவலம் மேற்கொண்டார்.

இதனால், காரைக்குடிக்கு காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட பகல் 12 முதல் 2.30 மணிக்குள் விஜய்யால் வர முடியவில்லை.

பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்ட திடலுக்கு பிற்பகல் 2.40 மணியளவில் வந்த விஜய், காரைக்கால் வேட்பாளர் பிரபுவை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

இதனால், பிரசாரம் நடைபெறும் இடத்தில் காலை முதல் வெய்யிலில் காத்திருந்த தொண்டர்களும் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

summary

Vijay Leaves Karaikudi Without Speaking! Supporters Who Waited in the Scorching Sun Are Disappointed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.