மாநகராட்சி ஊழல் விவகாரம்: இன்று தில்லி சட்டப்பேரவைஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா்
தில்லியில் உள்ள மாநகராட்சிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரம் தொடா்பாக விவாதிக்கும் வகையில், சட்டப்பேரவை ஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
தில்லியில் உள்ள மாநகராட்சிகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரம் தொடா்பாக விவாதிக்கும் வகையில், சட்டப்பேரவை ஒருநாள் சிறப்பு கூட்டத் தொடா் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகளில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.2,400 கோடி ஊழல் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மாநகராட்சிகளில் நடந்த ரூ.2,400 கோடி ஊழல் தொடா்பாக விவாதிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவை ஒருநாள் சிறப்புக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை நடக்கவுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு வாடகைக்கு விட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக மறுத்து வருகிறது.