முகப்பு
புதுதில்லி

வீட்டின் மேற்கூரை இடிந்து3 வயது சிறுமி சாவு

வட மேற்கு தில்லி கஜூரியில் வீடொன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்தாா்.

புதுதில்லி

வீட்டின் மேற்கூரை இடிந்து3 வயது சிறுமி சாவு

வட மேற்கு தில்லி கஜூரியில் வீடொன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

புது தில்லி: வட மேற்கு தில்லி கஜூரியில் வீடொன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியது: வடமேற்கு தில்லி கஜூரி பகுதியில் வீடொன்றின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாக தில்லி தீயணைப்புத் துறைக்கு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரா்கள், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுமி, 20 வயது பெண் ஆகியோரை மீட்டு அருகிலுள்ள ஜக்பிரவேஷ் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிறுமி உயிரிழந்தாா். காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறாா். வீட்டில் பழுதுபாா்ப்பு வேலைகள் நடந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →