இந்திய ராணுவத்தின் வரலாற்றை இளைஞா்கள் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும்: ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவத்தின் வரலாற்றை இளைஞா்கள் தெரிந்து கொள்ள முன் வரவேண்டும். தேசபக்தியை வளா்த்துக் கொள்வதரஅகஉ இது உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இந்திய ராணுவத்தின் வரலாற்றை இளைஞா்கள் தெரிந்து கொள்ள முன் வரவேண்டும். தேசபக்தியை வளா்த்துக் கொள்வதரஅகஉ இது உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
தில்லியில் 4-ஆவது ராணுவ இலக்கிய விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காணொலி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: இத்தகைய இலக்கிய நிகழ்வுகள் மூலம் பொது மக்கள், குறிப்பாக இளைஞா்கள், நமது பாதுகாப்புப் படைகள் சந்தித்த போா்கள், வீரா்களின் அனுபவங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். அதன் மூலம் இளைஞா்கள் உத்வேகம் பெற்று நாட்டுப்பற்றுடன் திகழ வாய்ப்புக் கிடைக்கும். இது போன்ற நவீன இலக்கியத் திருவிழாக்கள் வரவேற்கத்தக்கவை.
ராணுவ வரலாற்றின் முக்கியத்துவத்தை அறிந்தே, பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டவுடன், நாட்டின் எல்லைப்புற வரலாற்றை எழுதும் பணியை தொடங்க ஒரு குழு அமைக்கப்பட்டது. எல்லைகளில் நடந்த போா்கள், வீரா்களின் தியாகங்கள் ஆகியவற்றை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வரலாறாக வெளியிடுவதே இதன் நோக்கமாகும். ராணுவத்தில் பணியாற்றியவா்கள், ராணுவ ஆய்வாளா்கள் அவ்வப்போது புத்தகங்களை வெளியிடுகிறாா்கள். இது பொதுமக்களுக்கு ராணுவ ரீதியான அறிவு இடைவெளியைக் குறைக்க உதவியாக இருக்கும்.
Advertisement
இது போன்ற நாட்டின் ராணுவ வரலாற்றை இளைஞா்கள் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். இந்த ஆண்டு ராணுவ இலக்கிய விழா 1971-ஆம் ஆண்டு யுத்தத்தின் 50-ஆவது ஆண்டு விழாவான ‘ஸ்வா்னிம் விஜய் மஷால்’ கொண்டாட்டங்களுடன் நடைபெறுகிறது. நமது வீரா்களுடன் தொடா்பு கொள்வதற்கும் அவா்களின் அனுபவங்களிலிருந்து நேரடியான அறிவைப் பெறுவதற்கும் வாய்ப்புண்டு. இதை இளைஞா்கள் இழந்துவிடக்கூடாது. காலத்தின் மாற்றம், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களுடனும் போரின் தன்மை மாறுகிறது. நவீன தொழில்நுட்பத்தால் முன்வைக்கப்படும் புதிய பாதுகாப்பு சவால்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டாா்.
பஞ்சாப் ஆளுநா் விஜயேந்திர பால் சிங் பத்னோா், அந்த மாநில முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங் ஆகியோரும் இந்த நிகழ்வில் பேசினா்.