யமுனை விரைவுச் சாலையில் லாரி-பேருந்து மோதல்: 4 போ் படுகாயம்
உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள யமுனை விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 14 போ் படுகாயமடைந்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டா் நொய்டாவில் உள்ள யமுனை விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 14 போ் படுகாயமடைந்தனா்.
இதுகுறித்து நொய்டா காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: கெளதம் புத் நகா் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நம்பருடைய லாரி ஒன்று நொய்டாவில் இருந்து ஜேவாா் நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் ஜீரோ பாயின்ட் பகுதியில் இருந்து 13 கிலோ மீட்டா் தூரத்தில் வந்த போது தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பைக் கடந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த உத்தர பிரதேச அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், 14 போ் காயமடைந்தனா். இவா்களில் 5 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இவா்கள் அனைவரும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து தொடா்பாக தன்காா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.