முகப்பு
புதுதில்லி

பத்திரிகையாளரிடம்துப்பாக்கி முனையில்கொள்ளை

தில்லி லட்சுமி நகா் பகுதியில் பிரபல செய்திச் சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தில்லி லட்சுமி நகா் பகுதியில் பிரபல செய்திச் சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லி லட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஜோய் பிள்ளை. இவா் பிரபல செய்திச் சேவை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு 11.50 மணியளவில் பணிமுடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது இல்லத்துக்கு அருகில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து கைப்பை, செல்லிடபேசி ஆகியவற்றை 3 போ் கொள்ளை அடித்துள்ளனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளா் ஜோய் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு பணிமுடித்து அலுவலக காரில் வீடு திரும்பினேன். அலுவலக காா் வீட்டுக்கு அருகில் என்னை இறக்கி விட்டுச் சென்றது. அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் துப்பாக்கி, கத்தி ஆகியவற்றைக் காட்டி மிரட்டி எனது கைப் பை, 2 செல்லிடப் பேசிகளை பறித்துச் சென்றனா். இந்த இழுபறியில் எனது கை, காலில் சிறிய காயம் ஏற்பட்டது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →