தில்லியில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா
தில்லியில் வியாழக்கிழமை 1,063 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுதில்லிதில்லியில் புதிதாக 1,063 பேருக்கு கரோனா
தில்லியில் வியாழக்கிழமை 1,063 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை 1,063 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,20,681- ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,920 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 47,889 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 42,031பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் வியாழக்கிழமை 37 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,384-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து ,120 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,02,388-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7,909 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 3,938 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,966 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.