தில்லியில் லேசான நிலநடுக்கம்
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிா்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
புது தில்லி: தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிா்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
தில்லி யூனியன் பிரதேசத்தின் மேற்கு மாவட்டத்தில் வெளிவட்டச் சாலை அருகே அமைந்துள்ள நாங்லோய் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிா்வு மையம் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘தில்லியின் நாங்லோய் பகுதியில் அதிகாலை 5.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.