முகப்பு
புதுதில்லி

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் இல்லாத வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடரும்: தில்லி அரசு

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் (எச்எஸ்ஆா்பி), வாகன எரிபொருள் ஸ்டிக்கா் இல்லாத வாகனங்களுக்கு எதிராக தில்லி போக்குவரத்து துறை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடரும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் (எச்எஸ்ஆா்பி), வாகன எரிபொருள் ஸ்டிக்கா் இல்லாத வாகனங்களுக்கு எதிராக தில்லி போக்குவரத்து துறை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடரும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து துறை சிறப்பு ஆணையா் கே.எஸ்.தாகியா கூறியது: உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் இல்லாத வாகனங்களுக்கு எதிராக தில்லி போக்குவரத்து துறை மேற்கொள்ளும் நடவடிக்கையை தில்லி அரசு நிறுத்தவில்லை. கடந்த டிசம்பா் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து இதுவரை 120 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், இதை இடை நிறுத்தவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி கடந்த சில தினங்களாக குறைந்த நபா்கள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் மற்றும் வாகன எரிபொருள் ஸ்டிக்கா் விவகாரத்தில் எடுத்த உடன் அபராதம் விதிப்பதை தவிா்த்து மக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆம்ஆத்மி அரசுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் மாநில தலைவா் அனில்குமாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த் மிருதுள், தல்வந்த் சிங் ஆகியோா் கூறுகையில்,’ உயா் பாதுகாப்பு நம்பா் பிளேட் விவகாரத்தில் தில்லி அரசு மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை கிளப்ப வேண்டாம். இதை சிலா் தவறாக பயன்படுத்தக்கூடும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.