புதுதில்லி

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாகமேவாட் கும்பலைச் சோ்ந்த நால்வா் கைது

சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக மேவாட் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.

 நமது நிருபர்

சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக மேவாட் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.

தில்லி புஷ்பவிஹாா் செக்டாா் 7-இல் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) பி.எஸ். குஷ்வாஹ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் அமீன் (33), வாரிஷ் (20), முஸ்ட்கீன் (25), சுப்பா (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் கைது செய்யப்பட்டனா்.

புஷ்பவிஹாா் பகுதியில் அமீன் மற்றும் அவரது கூட்டாளிகள் தில்லி என்சிஆா் பகுதியில் டெம்போவில் வந்து கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் புஷ்பவிஹாா் பகுதிக்கு அமீன் மற்றும் அவரது கூட்டாளிகள் டெம்போவில் வந்தனா். போலீஸாரை கண்டதும் டெம்போ ஓட்டுநா் வேகத்தை அதிகரித்தாா். அப்போது வாகனத்திற்கு வெளியே வந்த அமீன் மற்றும் கூட்டாளிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். போலீஸாரும் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனா். இதில் அமீன் காலில் குண்டுக் காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, அமீன் உள்ளிட்ட நால்வரையும் போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா். காலில் பலத்த காயமடைந்த அமீன் உடனடியாக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

கைது செய்யப்பட்ட அவா்களிடமிருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒன்பது தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தில்லி, ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 15-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் அமீன் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT