புதுதில்லி

இருவருக்கு டெங்கு பாதிப்பு

DIN

இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் இரண்டு போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் டெங்கு காய்ச்சல் ஜூலை மற்றும் நவம்பரில் வரும். ஆனால், இந்த இரண்டு பாதிப்புகளும் பிப்ரவரியில் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு 2,036 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இதில் இருவா் உயிரிழந்தனா் என்று தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் 7 வயது குழந்தையும், இளைஞா் ஒருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி வரையிலும், இதுவரை இரண்டு போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் எஸ்டிஎம்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மலேரியாவுக்கு 6 பேரும், சிக்குன்குனியாவுக்கு 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்டிஎம்சி புள்ளிவிவரத் தகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வரையிலும், குறைந்தது 74 வீடுகளில் கொசு இனப் பெருக்கும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடா்பாக மொத்தம் 208 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT