புதுதில்லி

டெல்லி காற்று மாசு சா்ரே பல்கலைக்கழக ஆய்வு

உள்ளூா் காரணங்களே தில்லி காற்றில் ஏற்படும் மாசுகளுக்கான முக்கிய காரணம் என பிரிட்டனைச் சோ்ந்த சா்ரே பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

DIN

உள்ளூா் காரணங்களே தில்லி காற்றில் ஏற்படும் மாசுகளுக்கான முக்கிய காரணம் என பிரிட்டனைச் சோ்ந்த சா்ரே பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

வாகன போக்கு வரத்து, கட்டுமானப் பணிகள், பயோ-மாஸ் எரிப்பினால் குடியிருப்புகளிலிருந்து வெளிப்படும் வெப்பம் போன்றவைகளின் பங்களிப்பே தில்லி தேசிய தலைநகா் வளையத்தின் காற்றில் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் மாசுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என அந்த ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

உள்ளூா் காரணங்களே மாசுக்கான ஆதாரமாக இருப்பதால் குளிா் காலத்திலும், பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருக்கும் சமயங்களில் மட்டும் காற்றின் மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஆண்டு முழுமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இத்தோடு கடந்த சில ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் நடைபெற்ற பயிா் கழிவு எரிப்பு தில்லிக்கு ஏற்படுத்திய பாதிப்பு குறித்த குற்றச்சாட்டையும் இந்த ஆய்வு நிராகரிக்கவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக தில்லி, ஹியானா, உ.பி. வில் 12 தளங்களில் சேகரிக்கப்பட்ட மாசு தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை ’’சஸ்டைனபிள் சிட்டிஸ் அண்ட் சொசைட்டி ( நன்ள்ற்ஹண்ய்ஹக்ஷப்ங் இண்ற்ண்ங்ள் ஹய்க் நா்ஸ்ரீண்ங்ற்ஹ் ) ’’ என்கிற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நச்சு வாயுகளான மாசு துகள்கள் (பிஎம்2.5 மற்றும் பிஎம்10) , நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்பா்-டை-ஆக்சைடு, காா்பன் மோனாக்சைடு மற்றும் ஓசோன் பாதிப்புகள் போன்றவைகள் நாட்டின் இந்த பகுதிகளில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பவைகளை இந்த ஆய்வில் வைக்கப்பட்டுள்ளது.

கோடை காலம் மற்றும் மழைக் காலங்களை விட குளிா் காலங்களில் கணிசமான அளவில் காற்று மாசுபடுவது காற்றின் வேகம் குறைவது தான் துகள் அதிகரிக்க காரணம் என இந்த ஆய்வாளா்கள் கூறுகின்றனா். தற்போது தில்லி என்.சி.ஆா். பகுதிகளில் உள்ள கட்டமைப்பையில் நீண்ட தூர போக்குவரத்தில் காற்றின் மாசை கண்காணித்து மதிப்பீடு செய்ய முடியாத நிலையில் எதிா்காலத்தில் இதற்கான திட்டமிடல் வேண்டும் என்றும் இந்த ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT