முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா பலி 3004 ஆக உயா்வு

தில்லியில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை சனிக்கிழமை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

Updated On : 5 ஜூலை, 2020 at 1:45 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

தில்லியில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை சனிக்கிழமை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

தில்லியில் சனிக்கிழமை ஒரே நாளில் 2,505 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97,200 ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் ஒரே நாளில் 55 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 3,004-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,632 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா் என தில்லி சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது 25,940 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 68,256 போ் குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 23,673 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆா்டி-பிசிஆா் முறையில் 9925 சோதனைகளும், ரேபிட் ஆன்டிஜென் முறையில் 13,748 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தில்லியில் இதுவரை மொத்தம் 6,20,368 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 லட்சம் பேரில் (ஒரு மில்லியன்) 32,650 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தில்லியில், சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 448-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.