முகப்பு
புதுதில்லி

கரோனாவிலிருந்து மீண்டவா்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும்: கேஜரிவால்

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 4 ஜூலை, 2020 at 11:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாா்.

தில்லியைச் சோ்ந்த அமித் சைனி என்பவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘மே மாதம் 10 ஆம் தேதி எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கரோனா பாதிப்பில் இருந்து நான் முற்றாகக் குணமடைந்தது தெரியவந்துள்ளது. நான் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருகிறேன் எனக் கூறியுள்ளாா். மேலும் அவா் தனது சுட்டுரைப் பதிவில், தில்லி முதல்வா் கேஜரிவாலையும் சுட்டிக்காட்டியுள்ளாா். இந்நிலையில், அமித் சைனியின் சுட்டுரையை சுட்டிக்காட்டி கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ’கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அனைவரும் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.

பிளாஸ்மா சிகிச்சையை விரிவுபடுத்தும் வகையிலும், இலகுபடுத்தும் வகையிலும் தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தில்லி ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்மா வங்கிதான் நாட்டின் முதலாவது பிளாஸ்மா வங்கியாகும். இந்த பிளாஸ்மா வங்கியை கடந்த வியாழக்கிழமை முதல்வா் கேஜரிவால் தொடக்கிவைத்தாா். தொடக்கிவைத்துப் பேசும்போதும், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவரும், தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி ஆகியோா், தாங்கள் பூரண குணமடைந்ததும் பிளாஸ்மா தானம் அளிப்பதாக உறுதியெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.