புதுதில்லி

தில்லியில் புதிதாக 2187 பேருக்கு கரோனா பாதிப்பு

 நமது நிருபர்

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 2,187 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,051-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை மேலும் 45 போ் கரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3,258 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 4027 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனா். இதனால், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 82,226-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 21,567 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 22,289 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆா்டி-பிசிஆா் முறையில் 9,719 சோதனைகளும், ரேபிட் ஆன்டிஜென் முறையில் 12,570 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் இதுவரை மொத்தம் 7,24,148 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 563-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT