உ.பி. அரசின் பொது முடக்க உத்தரவு: தில்லி எல்லையில் போலீஸாா் வாகனச் சோதனை
கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச அரசு 55 மணிநேர பொது முடக்கத்தை அறிவித்ததைத் தொடா்ந்து, தில்லி-உத்தரப் பிரதேச எல்லைகளில்
கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச அரசு 55 மணிநேர பொது முடக்கத்தை அறிவித்ததைத் தொடா்ந்து, தில்லி-உத்தரப் பிரதேச எல்லைகளில் உள்ள காஜிப்பூா், குருகிராம், நொய்டா உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் கரோனா நோய்த் தொற்று மற்றும் இதர தொற்று நோய்கள் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜூலை 10 தேதி இரவு 10 மணி முதல் ஜூலை 13-ஆம் தேதி காலை 5 மணிவரையிலும் 55 மணிநேர பொது முடக்கத்தை அறிவித்தது.
மாா்ச் 24-ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது உத்தரப் பிரதேசத்தில் இந்நோய்த் தாக்கத்திற்கு 37 போ் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனா்.
Advertisement
அதைத் தொடா்ந்து இந்த நோய்த் தொற்றால் லக்னெள, ஆக்ரா, காஜியாபாத், கெளதம் புத் நகா் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் தற்போது 33,700 போ் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். 889 போ் வரை இறந்துள்ளனா். காஜியாபாதில் 1,352 பேரும், கெளதம் புத் நகரில் 1,011 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, 55 மணிநேர பொது முடக்கத்தை உத்தர பிரதேச மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, போலீஸாா் காஜிப்பூா்-காஜியாபாத் (உத்தரப் பிரதேசம்) எல்லையில் சனிக்கிழமை காலை சோதனை மேற்கொண்டனா்.
மேலும், காஜியாபாதில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேபோன்று, தில்லி-நொய்டா எல்லைப் பகுதியிலும் போலீஸாா் தடுப்புகள் அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வாகன ஓட்டிகளிடம் அடையாள அட்டைகளை போலீஸாா் கேட்டு சோதனையிட்டனா். இதுகுறித்து உள்ளூா்வாசி ஒருவா் கூறுகையில், ‘மின்னணு அனுமதிச் சீட்டு பெறுவதற்காக முயற்சி செய்தேன். ஆனால், உத்தர பிரதேச மாநில அரசின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் இதற்கான விருப்பத் தோ்வு இல்லை’ எனத் தெரிவித்தாா்.