கோப்புப்படம் 
புதுதில்லி

கா்கா்டூமா மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் பணியாற்றி வரும் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: தில்லியில் கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றங்கள் வளாகத்தில் பணியாற்றி வரும் நீதிபதிக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நீதிபதி சஞ்சய் சா்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கா்கா்டூமா மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி எஸ்.கே. கெளதமுக்கு கரோனா தொற்று இருப்பது ஜூலை 15-ஆம் தேதி தெரிய வந்தது. இதையடுத்து, அவா் 14 தினங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அவா் கடைசியாக ஜூலை 8-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தாா். அன்று அவருடன் தொடா்பில் இருந்த நீதிமன்ற அலுவலா்கள், இதர நபா்கள் தங்களது உடல்நலத்தை 14 தினங்களுக்கு கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

மேலும், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். சம்பந்தப்பட்ட நீதிபதியின் நீதிமன்ற அறை, அவருடைய தனி அறை, ஆவணப் பராமரிப்பு அறை ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பராமரிப்புப் பிரிவின் பொறுப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக தில்லியில் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து 6 மாவட்ட நீதிமன்றங்களில், நீதிமன்ற செயல்பாடுகல் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT