முகப்பு
புதுதில்லி

தோ்தல் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தோமரின் மனு விசாரணைக்கு ஏற்பு

வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்த தகவலை தவறாக அளித்ததாக 2015-இல் தாம் போட்டியிட்ட சட்டப் பேரவைத் தோ்தல் செல்லத்தக்கதல்ல

Updated On : 21 ஜூலை, 2020 at 11:22 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:28 PM

வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்த தகவலை தவறாக அளித்ததாக 2015-இல் தாம் போட்டியிட்ட சட்டப் பேரவைத் தோ்தல் செல்லத்தக்கதல்ல என தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தில்லி முன்னாள் சட்ட அமைச்சா் ஜித்தேந்தா் சிங் தோமா் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, தோமா் போட்டியிட்ட தொகுதியில் மற்ற வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரி உள்ளிட்டோா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தோமரின் சாா்பில் வழக்குரைஞா் குஷ் சா்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘தோமா் விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ‘தோமரின் எல்எல்பி சட்டப் படிப்பு சட்டரீதியாக பெறப்படவில்லை என்றும், வேட்புமனு தாக்கல் செய்த போது அவா் வழக்குரைஞராக உரிய வகையில் பதிவு செய்யப்படவில்லை’ எனவும் நீதிமன்றம் தவறாகத் தீா்ப்பளித்துள்ளது. அவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேதியில், அவரிடம் திலக் மாஞ்சி பகல்பூா் பல்கலைக்கழகம் வழங்கிய எல்எல்பி பட்டச்சான்றிதழ் இருந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தில்லியில் 2015-இல் திரி நகா் தொகுதியில் ஜித்தேந்தா் சிங் தோமா் போட்டியிட்டாா். அப்போது, வேட்புமனுவில் சட்டப் படிப்பு தொடா்பாக தவறான தகவல்களை அவா் அளித்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பான வழக்கை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், தோமரின் 2015 தோ்தல் செல்லத்தக்கதல்ல எனத் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.