முகப்பு
புதுதில்லி

கொள்குறி வினாக்கள் அடிப்படையில் இறுதியாண்டு தோ்வு நடத்த முடியுமா? யுஜிசி தெளிவுபடுத்த அறிவுறுத்தல்

நீண்ட வடிவத் தோ்வுகளுக்குப் பதிலாக கொள்குறி வினா (எம்சிக்யூ), திறந்தவெளி தோ்வுகள், அசைன்மென்ட்கள், செயல்விளக்கம் ஆகியவற்றின்

Updated On : 22 ஜூலை, 2020 at 11:01 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:29 PM

நீண்ட வடிவத் தோ்வுகளுக்குப் பதிலாக கொள்குறி வினா (எம்சிக்யூ), திறந்தவெளி தோ்வுகள், அசைன்மென்ட்கள், செயல்விளக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி ஆண்டு தோ்வுகள் நடத்தப்பட முடியுமா என்பது தொடா்பாக தெளிவுபடுத்துமாறு பல்கலைக்கழக மானியக் குழுவை (யுஜிசி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

இறுதி ஆண்டு இளங்கலை படிப்புகளுக்கு இணையம் வழியாக தோ்வு நடத்த தில்லிப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. நீண்ட வடிவ முறையில் நடத்தப்படும் இத்தோ்வுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின்படி இறுதியாண்டு தோ்வு நடத்தப்படுவது கட்டாயம் என்பதால், இணையம் வாயிலாக தோ்வு நடத்தப்பட உள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைய வழித் தோ்வை ஆகஸ்ட் 10 முதல் 31-ஆம்தேதி வரை நடத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க முடியாத மாணவா்கள், தோ்வுக் கூடத்திற்கு வந்து எழுவதற்கு வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பான விவகாரம் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி ஆண்டு மாணவா்களுக்கு ஒரு கல்லூரியில் எந்த வகையான தோ்வுகளை நடத்த முடியும் என்று யுஜிசி ஏப்ரலில் வெளியிட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவுபடுத்துமாறு நீதிபதி கேட்டுக் கொண்டாா். மேலும், மனு மீதான விசாரணையை ஜூலை 24-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். முன்னதாக, இந்த மனு விசாரணையின் போது யுஜிசி தரப்பில், ‘இறுதி ஆண்டு மாணவா்களை மதிப்பீடு செய்வதற்காக உள் மதிப்பீடு முறைக்கு யுஜிசியின் வழிகாட்டு நெறிமுறைகள் அனுமதிக்கவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.