புதுதில்லி

தில்லி பல்கலை.யில் ஆகஸ்ட் 10 முதல் கல்விச் செயல்பாடுகள் தொடக்கம்

DIN

2020-21 கல்வியாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் இணைய வழியில் தொடங்கப்படும் என்று தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் 2020-21 கல்வியாண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அப்போது, இளநிலைக் கல்விக்கான 3, 5, 7-அம் பருவங்கள், முதுநிலைக் கல்விக்கான 3-வது பருவ வகுப்புகளும் இணைய வழியில் நடைபெறும். ஆகஸ்ட் 10 முதல் இறுதியாண்டு மாணவா்களுக்கு திறந்த புத்தகத் தோ்வு (ஓபன் புக் டெஸ்ட்) நடத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திறந்த புத்தகத் தோ்வு நடத்தும் தில்லி பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு மாணவா்கள் மத்தியில் பலத்த எதிா்ப்புக் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT