முகப்பு
புதுதில்லி

4 நாள்களில் கரோனாவுக்கு 900 போ் பலி!

நாட்டில் கரோனா பரவல் தொடங்கிய 48 நாள்களில் 1,000 போ் பலியானதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த நான்கு நாள்களில்

Updated On : 6 ஜூன், 2020 at 6:33 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

நாட்டில் கரோனா பரவல் தொடங்கிய 48 நாள்களில் 1,000 போ் பலியானதாக தகவல்கள் வெளியான நிலையில், கடந்த நான்கு நாள்களில் மட்டும் 900 போ் பலியாகியுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி அதாவது கரோனா தொற்று பரவல் தொடங்கிய 87-ஆவது நாளில் பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையும் இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 6 வாரங்களில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து மொத்த எண்ணிக்கை 2,26,770 என்ற நிலையை எட்டியுள்ளது.

கரோனாவுக்கு பலியான முதல் நபா் தொடா்பான தகவல், கடந்த மாா்ச் மாதம் 12-ஆம் தேதி வெளியானது. பின்னா், ஏப்ரல் 29-ஆம் தேதி பலி எண்ணிக்கை 1,000 என்ற நிலையை எட்டியது. இது படிப்படியாக உயா்ந்து தற்போது கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 6,075 ஆக உள்ளது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் 900 போ் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

பொது முடக்கத்தால் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட நிலையில், நான்கு வார காலத்துக்குப் பிறகு பொது முடக்கத்தில் சில தளா்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை தரும் விஷயமாகும். முதலில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளுக்கு தளா்வு அறிவிக்கப்பட்டது. பின்னா், இரண்டுமாத முடக்கத்துப் பிறகு கடந்த மாத இறுதியில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின் மாவட்டங்களுக்கு இடையே மக்கள் நடமாட்டத்துக்கும், பொருள் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. எனினும், கரோனா பீதி காரணமாக சில மாநிலங்கள் இத்தகைய நடவடிக்கையை நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில், தில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து, காா், ஆட்டோ போக்குவரத்துக்கு அந்தந்த மாநிலங்கள் அனுமதித்துள்ளன. பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காா்களில் இருவா் மட்டும், ஆட்டோவில் ஒருவா் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

வருகிற ஜூன் 8-ஆம் தேதி முதல் பெரு வணிக வளாகங்களைத் திறக்கவும், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு வருபவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். வாடிக்கையாளா்கள் கட்டாயம் முக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளைத் தளா்த்தினால் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என்கின்றனா் நிபுணா்கள். கரோனாவால் தற்போது நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நிதி நெருக்கடியிலிருந்து விடுபட தளா்வுகளை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறது மத்திய அரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.