முகப்பு
புதுதில்லி

தில்லியில் பொது முடக்கத்தைகடுமையாக அமல்படுத்த கோரி வழக்கு

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் பொது முடக்கத்தை கடுமையாகஅமல்படுத்த தில்லி அரசுக்கு

Updated On : 12 ஜூன், 2020 at 7:37 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM

கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் பொது முடக்கத்தை கடுமையாகஅமல்படுத்த தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை வழக்குரைஞா் அனிா்பன், அவரது ஊழியா் பவன் குமாா் ஆகியோா் தாக்கல் செய்துள்ளனா். வழக்குரைஞா் மிருதுள் சக்ரவா்த்தி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் முந்தைய பொது முடக்கக் காலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது தளா்வுகளுக்குப் பிறகு கரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்த தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், கரோனா தொற்றை தடுக்க அல்லது கட்டுப்படுத்துவதற்காக ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்க வைரஸ் நோய் வல்லுநா்கள், மருத்துவ நிபுணா்கள், மருத்துவா்கள் ஆகியோா் அடங்கிய வல்லுநா் குழுவை அமைப்பது தொடா்பாக பரிசீலிக்கவும் தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும். தில்லியில் பொதுப் போக்குவரத்து, மத வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை மீண்டும் திறக்கவும், செயல்படவும் அனுமதித்ததால் கரோனா தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும், போதிய படுக்கைகள், சுவாசக் கருவிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு வாா்டுகள், பரிசோதனை வசதிகள் ஆகியவை தில்லியில் போதுமான எண்ணிகையில் இல்லை. மாநிலத்தின் தற்போதைய முயற்சிகள் பொருளாதார, நிதி சாா்ந்த விஷயங்களில் இருக்கக் கூடாது. ஆனால், மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு விஷயங்களில் இருக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.