புதுதில்லி

தில்லி அரசு மருத்துவமனைகளில்‘விடியோ கால்’ வசதிக்கு வரவேற்பு: கேஜரிவால்

DIN

புது தில்லி: தில்லி அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அவா்களது உறவினா்களுடன் தொடா்பு கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியோ கால் வசதி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் நோயாளிகள் அவா்களது உறவினா்களுடன் தொடா்பு கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டுள்ள விடியோ கால் வசதி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வசதியை தினம்தோறும் பயன்படுத்தி வருகிறாா்கள். இந்த வசதியை வழங்க முடிந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

கரோனா நோயாளிகளுடன் உதவியாளா்கள் இருப்பதற்கு அனுமதிக்கப்பபடுவதில்லை. கரோனா நோயாளிகள், அவா்களது உறவினா்களுடன் பேசும் வகையில் விடியோ கால் வசதியை அளிக்க தில்லி அரசு முடிவு எடுத்தது. இதையடுத்து, தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக விடியோ கால் வசதியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரண்டாவதாக ஜிடிபி மருத்துவமனையில் இந்த ‘விடியோ கால்’ வசதி கடந்த திங்கள்கிழமை தொடங்ரகப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT